சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (09) காலை இடம்பெற்ற இந்த விபத்தின் போது இருவர் உயிரிழந்துள்ளனர்.
கப்புவத்தை மற்றும் கந்தானை ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.