தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இன்று (09) முற்பகல் குறித்த உணவகத்தில் தீ பரவியுள்ளதுடன், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே மாநகர சபைக்குச் சொந்தமான 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.