Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இராணுவ வீரர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது!

இராணுவ வீரர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது!

நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியில் வசித்து வந்த இந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ, ரன்பொகுணுகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியில் வசித்து வந்த இந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர், 2018.09.09 அன்று கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றையதினம் நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்பொகுணுகம பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைதான நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான சிறிய ரக துப்பாக்கி ஒன்று, அதற்காகப் பயன்படுத்தப்படும் 5 தோட்டாக்கள், ரி-56 ரக தோட்டாக்கள் 4, 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் 8 மற்றும் 12 போர் ரக தோட்டாக்கள் 2 ஆகியவற்றை புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter