Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு- சிறுவர்களின் எச்சங்கள் மீட்பு!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு- சிறுவர்களின் எச்சங்கள் மீட்பு!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வாராய்ச்சி நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சிறுவர்களுடைய இரு எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டன.

இந்தநிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது.

அவற்றில் 298 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, தற்பொழுது நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter