Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!

டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 35,000ஐக் கடந்துள்ளதுடன், பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 19 ஆகும்.

இந்த ஆபத்து நிலைமையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜூன் 08, 09 மற்றும் 10 ஆகிய மூன்று தினங்களில் நாடு தழுவிய ரீதியில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவாகும் டெங்கு நோயாளர்களில் அதிகளவானோர், அதாவது 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகுகின்றனர்.

தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நோயாளர்கள் பதிவாகி வருவதுடன், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்தே முறையே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

பகிர்க: Facebook Twitter