யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பகுதியில் இருந்து கடற்றொழிக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
நேற்றையதினம் நான்காவது நாளாகவும் அவர்கள் தேடப்பட்ட நிலையில் கண்டறியப்படவில்லை.
குறித்த மீனவர்கள் கடந்த புதன்கிழமை இரவு கடல் தொழிலுக்கு சென்ற நிலையில் கரைக்கு திரும்பவில்லை என உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதேச மீனவர்களும், கடற்படையினரும் இணைந்து தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.