Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை!

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கேகாலை மாவட்டத்தின் தெரனியாகலை, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, அயகம, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு வெளியேறுவதற்கான ‘சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்கை பகுதிகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பகுதிக்கும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, ஹொரணை, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத, கலவனை, நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கம்பஹா மாவட்டத்தின் மீரிகம மற்றும் திவுலபிட்டிய பகுதிகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த மற்றும் மத்துகம பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய பகுதிக்கும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதிக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter