Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு!

விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணை ஒன்றிற்காக நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய அவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த வேளையில், அங்கு திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை பொலிஸார் உடனடியாக மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்க: Facebook Twitter