Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நில்வலா கங்கையில் விழுந்து நபர் ஒருவர் மாயம்!

நில்வலா கங்கையில் விழுந்து நபர் ஒருவர் மாயம்!

அக்குரஸ்ஸ நகரப் பகுதியிலுள்ள நில்வலா கங்கையின் பாதுகாப்பற்ற இடமொன்றில் இருந்து ஆற்றுக்குள் விழுந்து நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரவக்க, ஒலியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

தமது வேலைக்காக காலி நோக்கிச் செல்வதற்காக வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் பேருந்திலிருந்து இறங்கி, தனது காலணியை அணிய முயன்றபோதே இவ்வாறு ஆற்றுக்குள் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவர் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களும் , பிரதேசவாசிகளும் இணைந்து அவரைத் தேடும் பணிகளை முன்னெடுத்த போதிலும், இதுவரை அவர் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

பகிர்க: Facebook Twitter