Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

உயர் நீதிமன்றின் மற்றுமொரு சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு நாடாளுமன்றில் அறிவிப்பு!

உயர் நீதிமன்றின் மற்றுமொரு சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு நாடாளுமன்றில் அறிவிப்பு!

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலமானது, நாட்டின் அரசியலமைப்பிற்கு முழுமையாக இணங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்றைய (19) நாடாளுமன்ற அமர்வின் போது இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார்.

அரசியலமைப்பின் 121 (1) ஆம் பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்ட சவாலொன்றைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலம் ஒட்டுமொத்தமாகவும், அதேபோன்று அதில் உள்ள ஒவ்வொரு விதிகளும் அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவுக்கும் முரணாக அமையவில்லை என நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பகிர்க: Facebook Twitter