தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை முன்னிட்டு “தமிழின அழிப்பு நினைவு நாள்” பேரணி நேற்றையதினம் (18) London நகரில் நடைபெற்றுள்ளது.
மிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து நீதிக்கான கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
குறித்த நிகழ்வு பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் Parliament Square பகுதியில் ஆரம்பமாகியதுடன், Westminster Underground station அருகில் மக்கள் ஒன்று கூடியதைத் தொடர்ந்து Downing Street நோக்கி பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.
“Genocide against Eelam Tamils by the Sri Lankan state” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு, தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை உலக நாடுகளுக்கு மீண்டும் நினைவூட்டும் நோக்கில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.