Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது மேலதிக வரி!

வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது மேலதிக வரி!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் ஒன்றுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 30% சுங்க இறக்குமதி வரியின் மீது மேலும் 50% மேலதிக வரி விதிக்கப்படும்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று (16) முதல் மூன்று மாத காலப்பகுதிக்கு இந்த 50% மேலதிக வரி வசூலிக்கப்படவுள்ளது.

எனினும் மே 15 அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய 50% சுங்க வரி பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter