வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தண்டவாளத்தில் கழற்றப்பட்ட ஆணிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்ற நபர் இவரே என்பது பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.