முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகவுகள் வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றையதினம் யாழ்.கைதடியிலும் நினைவேந்தல் நிகவுகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், கைதடி முச்சக்கர வண்டி சங்கமும் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் இ.யோகேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.