வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது ரயிலில் பயணித்த பயணி ஒருவர் பெட்டிக்கு வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அவர் கவிழ்ந்த ரயில் பெட்டிக்கும் ரயில் மார்க்கத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கும் இடையில் சிக்கியதால் காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த 12 பயணிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
விபத்து காரணமாக கீழ் ரயில் மார்க்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் விபத்து நடந்த இடத்திற்கு தற்போது ரயில்வே திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்து சம்பவம் நடந்த இடத்திற்கு தற்போது ரயில்வே திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.