ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மொரன்துடுவ, மஹாலந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (15) காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.