மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட்ட இலங்கையின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைத்து வரும் மழை இன்று முதல் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இன்றைய தினம் மேற்கு, வடமேற்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.