Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும்.

இதற்கமைய மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களுக்கும் ‘அம்பர்’ நிறத்திலான கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகக் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter