Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள வழுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் அதே பகுதியில் நீடித்து வருகின்றது. இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

கடற்பிராந்தியங்களில், காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதன் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும்.

காற்று மேற்கு திசையிலிருந்தோ அல்லது திசை மாறியோ வீசக்கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 25-35 கிலோமீற்றர் வரை காணப்படும்.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதி அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடல் பகுதிகள் மிதமான நிலையில் இருக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter