வெல்லாவெளி, சின்னவத்தை பிரதேசத்தில் உள்ள வயல் நிலமொன்றில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்த வேளையில், உயிரிழந்த நபர் கடந்த 08ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சின்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.