Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

மாதிவெல பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதிவெல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபரிடம் இருந்து 1 கிலோகிராம் 58 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோகிராம் 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter