யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணி கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
3ஆம் கட்ட அகழ்வுப் பணியின் ஒன்பதாம் நாள் அகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புதிதாக ஒரு மனித என்புத் தொகுதி கண்டெடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி மொத்தமாக இதுவரையில் 256 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.