Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான 21 வயது இளைஞன்- மட்டக்குளி பகுதியில் சம்பவம்!

போதைப்பொருளுடன் கைதான 21 வயது இளைஞன்- மட்டக்குளி பகுதியில் சம்பவம்!

மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரிடம் இருந்து 77 கிராம் ஐஸ் போதைப்பொருள், 60 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 508,100.00 ரூபா பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter