Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிப்பது தொடர்பில் அவதானம்!

ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிப்பது தொடர்பில் அவதானம்!

ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனவே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்க அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஈரானுடன் அமெரிக்கா மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி இன்று காலை முதல் ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களைப் பாதுகாப்பாக விடுவிக்க அமெரிக்கா தனது சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பல கப்பல்களில் உணவுப் பொருட்கள் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளில் எவரேனும் இடையூறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக நிலவும் பதற்றம் காரணமாகப் பல சரக்குக் கப்பல்கள் தடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், அமெரிக்காவின் இத்தகைய தலையீடுகள் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயலாகும் என ஈரான் எச்சரித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter