Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மின்சாரக் கட்டணம் மீண்டும் உயர வாய்ப்பு!

மின்சாரக் கட்டணம் மீண்டும் உயர வாய்ப்பு!

11 சதவீதம் வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த போதிலும், இந்த மாதம் 10ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதம் வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது .

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற ஊழலால் ஏற்பட்ட 18 பில்லியன் ரூபாய் இழப்பை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

எனினும் அரசாங்கம் அதனை மறைமுக வரிகள் மூலம் மக்களிடமே வசூலிக்கத் தயாராகி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

உணவு, மருந்து மற்றும் விவசாய உபகரணங்களுக்கான வட் வரியை நீக்குவதாக கூறிவிட்டு, நடைமுறையில் சமூகப் பாதுகாப்பு வரியுடன் சேர்த்து சுமார் 22 வீதம் வரை வரி வசூலிக்கப்படுவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பகிர்க: Facebook Twitter